தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

என்மனம்..! கெங்கா ஸ்ரான்லி.

என்மனம்..!
கெங்கா ஸ்ரான்லி.
——
மனம் முழுக்க உங்கள் நினைப்பு
தினம்தினம் பல நிகழ்வு
இனசனம் அருகில் இருந்தும்
மனதில் சஞ்சலமே
எங்கும் எதிலும் உங்கள் உருவம்
சாப்பிடும் போதும் உங்கள் முகம்
எந்நேரமும் உங்கள் நினைவே
முடியவில்லை நினைக்கின்றேன்
ஆறுதலடைய
கொஞ்ச நேரம் நினையாது இருந்தாலும்
மிஞ்சும் நேரம் திரும்ப வந்துவிடும்
யாருடன் கதைத்தாலும் முடிவில்
உங்கள் கதைதான் வரும்
கதைக்கும் போதும் கண்ணீர் வரும்
கட்டுப் படுத்த கஷ்டமாக இருக்கும்
ஏனிந்த வாழ்க்கை
ஏனிந்த நலைமை
அன்றில்களாக இருந்தோம்
மகிழ்ச்சி நிம்மதி எல்லாம்
உங்களுடனே போய்விட்டதே
என் செய்வேன் என் மனம்
படும்பாடு
சொல்ல முடியா வேதனையில்..

கெங்கா ஸ்ரான்லி
ஜேர்மனி.
03.05.23.

Nada Mohan
Author: Nada Mohan