ஒளவை

இலக்கு
————
இலக்கு நோக்கி இயங்கும் மனமே
உலகில் என்றும் உயர்வு உனதே
விலங்கை உடைத்து விண்ணைத் தாண்ட
கலக்கம் இன்றிக் கடினம் ஏற்பாய்

குலத்தின் பெருமை குன்றும் வகையில்
பலத்தைக் காட்டும் பண்பு வேண்டாம்
இலட்சம் கோடி இலாபம் தரினும்
இலட்சிய நோக்கை இம்மியும் விலக்காய்

நிலவைப் போல ஒளியைத் தந்து
துலங்கச் செய்யும் தூய இலக்கு
சலனம் இல்லாச் சிந்தை கொண்டால்
விலகும் உந்தன் தோல்விப் படிகள்

மலரும் உந்தன் மனதின் சிரிப்பில்
புலரும் பொழுது புதுமை காணும்
பலரும் சொல்லும் பழிகள் ஒதுக்கு
நலமாய்த் தொடரும் நாளை விடியல்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading