புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஒளவை

வழிகாட்டு இறைவா…..
======================
ஆதி முதல்வனே
அண்டம் ஆள்பவனே
சோதி வடிவனே
சொர்க்கம் உன்பதமே
நீதி வழுவுதே
நித்தமும் பூமியில்
சேதிகள் மூலம்
சொல்வது என்னவோ

வாதிட ஏதுளது
வந்தபயன் கொண்டோமே
தீதினில் உழல்கின்றோம்
திண்டாடி மாழ்கின்றோம்
நாதியற்ற உயிர்களோ
நானிலத்தில் பலகோடி
பாதிப்பைக் குறைக்கும்
பரிகாரம் காட்டிவிடு

கங்கையைத் தாங்கிக்
கனத்தினைக் குறைத்தாய்
திங்களைக் காத்து
சடையிலே வைத்தாய்
மங்கிடும் பூமியின்
மானத்தைக் காக்கத்
தங்கிடு இங்கே
தாங்கவில்லைத் துன்பம்

பொங்கிடும் தீமையின்
போக்குகள் நீளுதே
எங்கிலும் உந்தன்
எண்ணமும் மறையுதே
பங்கங்கள் சூழ்ந்து
பாரெங்கும் துன்பமே
எங்களை மீட்க
ஏதொரு வழிகாட்டு.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading