மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஒளியிலே தெரிவது…

ரஜனி அன்ரன்

ஒளியிலே தெரிவது……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.11.2024

கார்மேகம் மழை பொழிய
கார்முகிலும் குடை பிடிக்க
காந்தள்களும் முகையவிழ்க்க
கார்த்திகைத் தீபங்களும் சுடர்விட்டெரிய
கண்ணுக்குள் விடியலைக்
கனவாகச் சுமந்து சென்ற
கார்த்திகை மைந்தர்களின் ஒளிமுகமும்
கார்கால ஒளியினிலே மின்னித் தெறிக்குமே !

மாவீரர் காலம் மழை பொழியும் காலம்
பொழியும் மழைத்துளியும் உம் முகம் நனைத்திட
பூமித்தாயும் சில்லென்று சிலிர்த்திட
பூங்காற்றும் வந்து மெல்லத் தழுவிட
பூத்திடும் காந்தளும் பொன்மேனியை அணைத்திட
கார்த்திகைத் தீபமும் சுவாலை விட்டெரிய
தீபத்தின் ஒளியினிலே தெரிவது உம் திருமுகமே !

சத்திய வேள்வியில் ஆகுதியாகி
நித்தியமான உத்தம சீலர்களே
நீவிர் அத்தனை பேரும்
கார்த்திகை மலர்வில் தீபத்தின் ஒளிர்வில்
ஒளிரும் உன்னத சுடர்மணிகளே
எம் கண்ணீர்த் துளிகளும் காணிக்கையாகிட
தீபஒளியினில் தெரிவது உம் திருமுகமே !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading