கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் எழுதியே
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்
தீரமன சிந்தனையோடு
தந்திடும் கருத்தும்
காரமாகி உரைத்துடும்
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி
இதையத்தை கல்லாக்கி
வண்ணத்தை வரிகளாக்கி
வார்த்தைகளை தீயாகி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading