கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கருணையொடு கைகொடு

உள்ளத்தில் உகவைபொங்க
உலகத்தை நீயறிவாய்
பள்ளத்தில் வீழ்ந்தலும்
பண்பிலே நீகுறையாய்
கள்ளமில்லா நல்வாழ்வு
கண்டதினால் உயர்வாவாய்
துள்ளுகின்ற மனத்தாலே
துயர்தனைத் துடைத்திடுவாய்

அன்னையின் அன்பினிலே
ஆழத்தை நீயறிவாய்
அன்பின் ஊற்றினிலே
அகிலத்தை அணைத்திடுவாய்
இன்பத்தால் இதயத்தில்
இறைவனையும் ஏற்றிடுவாய்
மன்னுயிரை என்நாளும்
மாண்புடன் அணைத்திடுவாய்

வதிவிடத்தில் வாழ்நாளை
வாஞ்சையுடனே பதியவேணும்
கதியற்ற மாந்தருக்கு
கைகொடுத்தே உதவவேணும்
மதியுடனே காரியங்கள்
மனதாரச் செய்யவேணும்
நதிபோல ஓடவேணும்
நல்லவராய் வாழவேணும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan