புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

கமலா ஜெயபாலன்

வசந்தம்
தென்றல் வீசவர தெம்மாங்கு பாடிவர
தளிரும் துளிர்த்து தாவரங்கள் பசமைதர
அன்பின் ஊற்றாய் அன்றில்கள் இசைபாட
அசைதாடும் மணம்கமழும் அல்லிகளும் அழகாய்
இன்பம் பொங்கிட இல்லம் சிறந்திட
இரவும் குறைந்து இதமான பகல்வர
உன்னதமாய் உயிரினங்கள் உலா வரவும்
உதித்திடுவான் சூரியனும் உகவை பொங்க

வாழ்வினில் வசந்தம் வந்திடும் போது
வறுமையும் அகன்று வளமும் பெருகும்
தாழ்வும் அகன்று தரமும் உயந்து
தங்கமாய் மனமும் தண்ணொளி யாகும்
ஊழ்வினை அகன்று ஒளியும் பிறக்கும்
ஒற்றுமை வாழ்வில் ஒன்றியே சேரும்
பாழ்படா வாழ்வும் பற்றும் ஓங்கவே
பாசமும் நேசமும் பரவச வசந்தமே

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan