கீத்தா பரமானந்தன்

சுடர்!
படர்கின்ற இருளைப்
பகலொளி ஆக்கப்
பதமொடு வந்தே
பரவிடும் இன்பம்!

சிரமங்கள் விலக்கிச்
சிந்திடும் ஞானம்
உரமதைப் பகரும்
உள்ளத்தில் நாளும்!

பேதங்கள் அகற்றப்
புறப்பட்ட நேசம்
சாவிலும் நின்றே
சரித்திரம் பகரும்!

அறமதும் கூடும்
அறிவியல் நாடும்
விரவிடும் சுடரென
விரட்டிடும் மூடம்!

தீபத்தின் சுடராய்த்
தீமைகள் பொசுங்கும்
அறிவதன் சுடரில்
அகிலமும் பணியும்

கற்றலிற் பற்றினில்
கனன்றிடும் முனைப்பினில்
காலமும் மின்னுவோம்
கனிந்திடும் சுடராய்!

கீத்தா பரமானந்தன்
10-04-2023

இருளெனும் மாய
இடரினைப் போக்கி
இயக்கிடும் ஞானம்
சுடரொளி யாகும்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading