தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
மாவீர்ரே
———

தமிழர் மனதில் தடம் பதித்த
தங்க மணிகளே
தாரக மந்திரம் தமிழ்ஈழம்
தங்கவைக்க பாடுபட்டீரே
எங்கள் மண்மீட்புக்காய்
உங்கள் இன்னுயிர் ஈந்தவரே
தங்கள் பெருமை கூற
தரணியில் தமிழர் உண்டு காண்பீரோ
மன்னாதி மன்னரும் படை கொண்டு
வெல்ல
பொன்னான உம் கரத்தினால்
ஆயுதம் ஏந்தி வெல்ல
தன்மானம் காத்த வீர்ரன்றோ
தந்தை தாய் அரவணைப்பு இழந்தவரன்றோ
அன்னமின்றி தண்ணியின்றி
நடந்த கால் துவள
நித்திரை இன்றி நிம்மதி இன்றி
எடுத்த காரியம் முடிக்க
அயராது உழைத்தவரே
ஆத்ம அஞ்சலிகள்
அள்ளி மலரால் அர்ச்சிக்கின்றோம்
மாவீர்ரே உங்களையே
கெங்கா ஸ்ரான்லி
29.10.23

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading