கெங்கா ஸ்ரான்லி

தாய்மை

கருவறையில் சுமந்தவள்.
கருவிழியால் காத்தவள்.
உருவம் தன்னைத் தந்தவள்
உலகத்தைக் காட்டியவள்.

தாய்மை என்பது அழகு,
சேய்மை அதைவிட அழகு.
வாய்மை அங்கு மகிழ்வு.
வாழுமே அங்கு தாயவள் மாண்பு.

வெய்யில் என்றால் மரமாவாள்.
மழை என்றால் குடையாவாள்.
குழந்தைக்குத் தாயானவள்.
குமுகத்தையும் வளர்த்தெடுப்பாள்.

குழந்தைக்கு ஒன்றெனில்
குற்றுயிராவாள்.
மருந்தை விடத்தாய்
மனத்தால் குணப்படுத்துவாள்.

தாய்மை தான் கோவில்
தாயானவளே தெய்வம்
தாய்மையைப் போற்றுவோம்
தாயை வணங்குவோம்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading