புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
வரப்புயர
***********
எல்லையிலா வரம்பு வேண்டும்
தொல்லையெல்லாம் அகலவேண்டும்
புலத்திலும் பொருளாதார வீழ்ச்சியே
புலம்புகிறோம் நாளும் விலைவாசி ஏற்றம் கண்டு
குமுறுகிறோம் குமுகாயம்
உயர்ந்திட
நம்வரம்பு உயர்ந்திட வேண்டுமன்றோ!
எதிர்நீச்சல் போட்டேதான்
கதிரவனைப்போலே ஒளிகொடுத்தே
ஊரில் எல்லாம் வரப்புயர
கூரிய அறிவுகொண்டு
காரியம் ஆற்றிடுவோம்
சேரிக்குள்ளும் செதுக்கல் செய்வோம்
பாரினில் பாரதி சொன்னதுபோல்
சாலைகள் அமைப்போம் நல்ல
ஆலைகள் அமைப்போம்
புல்லுருவிகள் வரம்புயர இடங்கொடாது
தன்னிறைவு காணும் தனிநாடு
முன்னிலையில் நிற்க முழுமூச்சாய் உழைப்போம்!
நன்றி வணக்கம்.
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள். திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு மிக்க நன்றி. அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
