கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
பாமுகமே வாழி
******************
எண்சீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் விளம்
வல்லமை பெற்றிட வழிதனைத் தந்துமே
வானலை ஆகினாய் வானுயர் சோலையாய்
நல்லதோர் ஊடகம் நற்றமிழ் பரப்பிட
நானிலம் ஓங்கவே நாற்றிசை ஒலிக்கவே
பல்சுவை நிகழ்வுகள் பரவசம் தந்ததே
பண்பினில் ஓங்கிய பாமுக மங்கையே
வல்லவர் நல்லவர் வாழ்த்தினில் வாழிநீ
வருடமும் கூடியே வளர்கவே என்றுமே!
எழுத்திலே முதன்மையாய் ஏற்றமும் கண்டுநீ
எத்தனை சிறுவரை எழுதிடச் செய்துநீ
உழுதிடும் உழவனைப் போலவே உயர்ந்துநீ
உழைப்பிலே உன்னதம் உலகமும் அறிந்ததே
பழுத்திடும் கனிகளைப் பாரினில் உதிர்த்துமே
பற்றுடன் இருந்துநீ பைந்தமிழ் வளர்த்திடும்
வழுவிலா மங்கையே
வாழிநீ ! வாழிநீ!
வருடமும் ஓடின வளர்பிறை நிலவுநீ!
வரமென வந்தனை வண்டமிழ் வளர்த்தனை
வகைவகை நிகழ்வுகள் வரிசையாய்த் தந்தனை
தரத்திலே முதலெனத் தரணியில் மிளிர்ந்தனை
தாரகை ஒத்தனை தமிழ்மொழிப் பற்றிலே
உரமென இருந்தனை உத்தமி! உணர்வுடன்
உயர்ந்துமே நின்றனர் உண்மையில் உண்மை
கரங்களைப் பற்றியே கவிதனில் வாழ்த்திடக்
களமதில் மகிழ்ச்சியே
கன்னியே வாழிநீ!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
களம் தந்து உற்சாகப்படுத்தும் பாமுகம் பணிப்பாளர் குடும்பத்தினருக்கு
மிக்க நன்றி!
கவிகளைத் திறனாய்வு செய்ய உதவி புரிவோருக்கு மிக்க நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
சக்தி சிறினிசங்கர்
