என் பிறந்தநாள்
வரமானதோ வயோதிபம்
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பேரன்பின் பெருவெளி!
நீதியும் நேர்மையும் நெஞ்சத்தில் அணிகலனாக
சாதுரியப் பெண்இவர் சாதனைகள் பற்பல
கவிதா ஞானவாருதிஎனக் கலையுலகம் போற்றியது
புவிதனில் புதுமைகளால் பூரிப்பில் நிறைந்தவர்
வாழும்வரை பெண்ணியத்திற்கு வலுக்கூட்டி உழைத்தவர்
வாளுக்கு ஒப்ப வார்த்தைகளில் கூர்மை
இணையராய் வாழ்த்துகள் இங்கிதமாய் வழங்குவார்
இணையருடன் சேர்ந்து அமைதிகாணச் சென்றாரோ?
இலண்டன்தமிழ் வானொலியில் இலக்கியமும் கவிதையும்
பலரும் வியக்கவே பொறிச்சொல்லும்
படைப்பார்
நவமான வார்த்தைகள் நறுக்கென்று இருக்கும்
இவரது ஆக்கங்கள் இயம்புமே இவரது
செந்தமிழின் ஆழம் செறிந்து கிடக்குமே
பந்தமும் பாசமும் பின்னிப் பிணைந்திட
முந்திடுவார் வாழ்த்துகள் மன்றத்தில் உரைக்கவே
தந்திடுவார் ஊக்கமும் தன்னம்பிக்கையும் பிள்ளைகளுக்கு
தாய்மை என்ற தூய உள்ளங் கொண்டு
வாயில்லா பறவைகளையும் வளர்த்து
செல்லப்
பிராணிகளையும் தவிக்கவிட்டு ப் பிரிந்துசென்றீரோ?
தரணி யாளும் தாயெனவே மாணவச்செல்வங்களை
அரவணைத்து அன்புகாட்டி அன்னையாய் இருந்தீரே
ஆசானாய் மட்டுமல்ல!
பேரன்பின் பெருவெளியாய் பெருமையுடன் வாழ்ந்தவர்
தூரச்சென்று தூங்குகிறார் துணைவருடன் சேர்ந்து!
கண்ணீர் அஞ்சலியுடன்
விடைபெறுகிறேன்.
