புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
வளர்ந்த குழந்தைகள் தாமே!
புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
பூமியை அழகுபடுத்தும் மலர்களே!
இன்றைய குழந்தைகள்
நாளைய உலகைச் செதுக்கும் சிற்பிகள்!
நித்தம் நித்தம் பூக்கும்
புத்தம் புது மலர்கள் போல்
தத்தம் சிந்தை விரித்து
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிகள்!
விண்ணைத் தொடுகின்றன
விதவிதமாய் பண்பாடும்
பொக்கிஷங்கள் பண்போடும்
பாரினில் வலம்வரும் வளர்பிறைகள்!
முழுமதியாகி ஒளிர்கின்றன
பெற்றோருக்கே வழிகாட்டும்
கலங்கரைவிளக்குகளாய்
கற்றலிலும் கடமையிலும் கண்ணியத்திலும் காப்பரண்களாகின்றன!
சுற்றம் சூழல் சுத்தம் பேணலில்
விற்பன்னர்கள்!
விந்தைமிகு உலகில் வீரநடை போடும் வித்தகர்கள்!
வளர்ந்த குழந்தைகள் தாமே
எல்லாக் குழந்தைகளும்
வரமாய்க் கிடைத்த தெய்வக் குழந்தைகளே!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றி!
திரு.திருமதி நடா மோகன்
அவர்களுக்கு நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்!
