தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
காணி!
*********
பத்துப் பரப்பு பரந்த தோட்டக்காணி
சொத்து சுகம் எண்டு சொர்க்கபூமியில
முற்றத்தில கூடி இருந்து
சுற்றம் சூழக் குதூகலித்தோம்!

அருமந்தகாணிகள் எத்தனை
குரும்பசிட்டி மண்ணில
உருக்குலைஞ்சு போச்சு
செருக்குடன் இருந்தோம் செத்தாலும்
எம்மண்ணில்தான் எண்டு
வில்லன்போல வந்தாங்கள் வீடுவாசல்
எல்லாம் தரைமட்டமாய்ப்போச்சு
கல்நெஞ்சம்கொண்டவங்கள் கலைச்சுப்போட்டாங்கள்
தொல்லை என்பெற்றவள் தந்தாள் தொலைதூரம் வந்திட்டேன்
குட்டி சிங்கப்பூர் போல் கிடந்த நிலம்
கட்டாந்தரையாய்க் கிடக்குதையா!
ஒருபகுதி விடப்பட்டு ஓட்டுவீடுகள்ஆங்காங்கே
ஒவ்வொரு வருடமும் செல்கையில்
உள்ளூர ஆனந்தம் இருப்பினும்
ஏக்கம் என்நெஞ்சில் குடிகொள்ளும்
எனக்கென ஒரு காணிஇல்லையே!
நன்றி வணக்கம்!

ப..வை.அண்ணாவுக்கும்
கூட ஆய்வு செய்யும் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading