வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

இலக்கியவானின் நட்சத்திரம்…

ரஜனி அன்ரன் (B.A.) இலக்கியவானின் நட்சத்திரம்... 22.10.2026 ஈழத்து இலக்கிய உலகை இனிய படைப்புக்களால் அலங்கரித்து கவிதைநாடகம்...

Continue reading

மாற்றம் காணும் உலகு

நகுலா சிவநாதன்
மாற்றம் காணும் உலகு

மாற்றம் காணும் உலகின்று
மாறும் மனங்கள் பலநின்று
ஏற்றம் காணும் வாழ்வினிலே
ஏனோ வாழ்வு மாற்;றமாக
காற்றாய் மனசும் பறக்கிறது
காலம் மெல்ல உரைக்கிறது
நேற்று நட்ட காளானும்
நேராய் வளர்வு காணவில்லை

மெல்ல விடியும் நல்விடியல்
மேதினி எங்கும் பனித்துளியே
சொல்ல வார்த்தை வருவதில்லை
சோகம் ஏனோ நிலைத்திருக்கு
வெல்ல நினைக்கும் நல்மனமே
வேற்றுப் பாதை போவதேனோ?
கல்லும் கனியும் வார்த்தைகேட்க
கனிந்து மனம் ஏங்குதே!

வாழ்வு என்ற அத்தியாயம்
வசந்தம் காணும் பெருவிருட்சம்
தாழ்வு என்ற தோல்வியினால்
தளர்ந்து போகா நிலைவேண்டும்
வீழ்ச்சி உன்னை நெருங்குகையில்
வீணாய் மனதைக் குழப்பாதே
தளர்ச்சி அற்ற வாழ்வினிலே
தடைகள் அகற்றி எழுந்திடுநீ

நகுலா சிவநாதன்1880

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading