புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
நடிப்பு
********
தேசபக்தர் என்ற போர்வை
நாசக்கும்பலோடு சேர்க்கை
பாசவலை வீச்சு
பாசாங்கு மூச்சு
நீசர்களாய் நடிப்பு!
நெஞ்சத்தில் வஞ்சுரம்
நேர்மை குன்றிய குணமும் கொண்டு
பஞ்சத்தில் வாடியிருப்போர் மேல்
எப்படி இரக்கம் காட்டுவர்?
கொஞ்சம் என்றாலும் சுரண்டிக் கொண்டு
சுத்தமனிதர்களாய்
நடித்துக்கொண்டு
கெஞ்சுவர் தர்மம் செய்யும்படி தாளம் போடுவர்
அஞ்சுதல் இல்லை அவமானம் நோக்கார்
அடிபணியார் குடிஉயர்த்திப் பேசுவர்
கொடிகட்டிப் பறப்பர்
நடிப்பதில் வல்லவர்!
உடன்பிறந்தவர் ஊன் இன்றி உறக்கம் தொலைத்துக் கொண்டிருப்பர்
கடமை செய்யவேண்டுமென்று கண்ணுக்கெட்டாத் தூரம் சென்று நடமாடிக் கொண்டிருப்பர்
நல்லவர்போல் நடித்துக்
கொண்டிருப்பர்!
உள்ளத்தில் கபடம்
உரையிலோ அரிதாரம்
நிறைவாய்ப் போச்சு நடிப்பு
இறைவா யாரிடம் செல்வோம்?
நன்றி வணக்கம்!
