சிவரூபன் சர்வேஸ்வரி

சிரிப்பு <<<
***************

சிந்தனை இன்றியும் சிறை மீனுமானேன்

சிரிப்பின் வகைகளும் எத்தனை ஏத்தனை

நக்கல் நளினம் நையான்டிச் சிரிப்பு

ஆணவம் மாயை அநீதியின் சிரிப்பு

காவியம் படைத்த கண்ணகியின் சிரிப்பு

கற்பின் மகத்துவத்தை தோற்றுவித்த சிரிப்பு

போலியாக வந்த சூற்பனகையின் சிரிப்போ

சூழ்ச்சி கொண்ட காமத்தின் சிரிப்பு
வேகம் கொண்ட வெஞ்சினச் சிரிப்போ

அழியும் நிலைக்கு அமைத்த வரிப்பே

தாகம் தீர்ந்தால் நன்றியின் சிரிப்பு

வேகமது கொண்டால் புயலின் சிரிப்பே

மோகம் கொண்டால் காமத்தின் சிரிப்பு

மோகினி போன்றே மயக்கும் சிரிப்பே

இன்பத்திலும் சிரிப்பு துன்பத்திலும் சிரிப்பு

இனிமை கொண்டதும்
சிரிப்பின் நயமே

தனிமை கொண்டும் சிரிக்க வைக்குமே

தாய்மை கண்ட பெண்மையின் சிரிப்பு

கன்னியவளிற்கு காதலில் ஆனந்தச் சிரிப்பு

கலைமானிற்கு துள்ளிப் பாயும் சிரிப்பு

பசுக்கன்றிற்கு பால் குடிக்கும் சிரிப்பு

சிரிக்கும் சிரிப்பே சிலருக்கு சீர்வரிசையாகும்

பொன்னகை தேவையில்லை என்பார்கள்

புன்னகையிருந்தாலே
போதுமே என்பார்களே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading