சிவா சிவதர்சன்

[ வாரம் 268 ]
“பெண்மை”

பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்பர் சான்றோர்.
பெண்ணே பிறக்கும்போது குறையேதுமின்றிப்பிறந்தாய்
பிறந்தமனை, கலாச்சாரம், சூழலால் வளர்நிலையிலுள்ளாய்
பெண்மையின் பெருமையைப் பேயென்பார் சிறுமதியார்

கற்பெனும் நிறைகலன்பூண்டோர் நெஞ்சினில் நிலைப்பார்
புறஅழகே மேன்மையெனத் தடுமாறும் நாகரீகமணியே
தாய்மை அழகைவெல்ல வேறேது அழகு இவ்வுலகில்?
மகப்பேறும் தாய்பாலூட்டுதலும்இயற்கையின் அழகே!

மலரிலும் மென் மையைப்பெண்மை என்பதுண்மை
மலரைக்கசக்கிட முனையின் விடுவாய் உயிரை
புலிகளின் ஆட்சியில் அனுபவித்தாய் சுதந்திரத்தின் எல்லை
இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய வாழ்க்கைத்துணை

“மாதராய்ப்பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடவேண்டும்”
பெண்ணேஎன்றும் நீயடையவேண்டும் வாழ்க்கையில்பெருமை.
“பெண்ணிற்பெருந்தக்கயாவுளகற்பெனுந்திண்மையுண்டாக்கபெறின்”
அன்றேயுரைத்தவர் பொய்யாமொழியார்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading