அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 219 ]
“ஆற்றல்”

வெள்ளம் பள்ளத்தையே நாடிப் பாயுமாற்றல்
உள்ளம் உணரா உழவனுக்கேது விளைச்சல்?
ஆற்றல் இல்லார்க்கு ஆழுமையோ பஞ்சம்
ஆனானப்பட்டவர் அறியார் ஆற்றலின் அம்சம்.

எண்ணையில் நீந்தும் நாடுகளுக்கோ நீர்ப்பஞ்சம்
வெள்ளத்தில் தவிக்கும் நாடுகளோ எண்ணைக்கு தஞ்சம்
கடலினில் கரையும் நீரால் தாயகத்தில் அவலம்
ஆற்றலாம் பண்டமாற்று நம்துயரம் நீங்கும்

ஆற்றல்மிக்க தமிழன் இன்று இயற்கையை விட்டான்
போற்றல் போயின்று தூற்றலில் திகழ்கின்றாய்
உலகிற்கே உணவளித்த உன்னாற்றல் தேடி
அலைகின்றாயா என் நாளும் இறைபாதம் நாடி?

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan