கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவா சிவதர்சன்

“சாந்தி”

பணம் பாதாளம் வரை பாயும்,நம்புகிறது உலகம்.
கேட்டவிலை கொடுத்தும் மனதில் அமைதிகிட்டாத அவலம்.
என்று மனம் நிறையும், அன்று சாந்தி நிலவும்.
மும்மலங்களும் வென்ற ஆன்மா,பிறவிப்பிணி அகலும்

சாந்திதேடி அலையும்கூட்டம் நாளும் பெருகக்கண்டோம்.
சாந்தி நிலையம்ஊருக்கொன்று நிறுவ முயல்வோம்.
உணவின்றித்தவிப்போருக்கு அன்ன சத்திரங்கள் ஆயிரம் படைப்போம்.
ஊனமுற்ற மாந்தர்காய் உதவும் காப்பகங்கள் அமைப்போம்.

இரந்துண்டு வாழும் ஈன்றோருக்கு, ஈயாதபிள்ளைகள் இருந்தென்ன லாபம்.
குமுறும் எரிமலையும், ஒருநாள் அமைதியாகும் அவாக்கொண்ட மனித மனம் மட்டும் அடைவதில்லை சாந்தி.
அவாத்துண்டும் ஜம்புலன்கள் அடங்கும்போது அங்குநிலவும் சாந்தி
நாளைய வாழ்வு நம் கையில் இல்லை ஆசைக்கனவுகளோ ஆயிரம்
பேரின்பமடையும் மார்க்கம் மனதில்கொண்டதில்லை எங்கனம் ஆகும் சாந்தி!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading