புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சிவா சிவதர்சன்
[ வாரம் 262 ]
“நேரம்”
நேரம் பொன்னானது என்றே நெஞ்சினில் கொள்வாய் தோழா!
கறந்தபால் மடியில்ஏறுமா? இறந்தகாலம்நிகழ்காலமாகுமா தோழா?
காலமறிந்து முயற்சித்தால் வெற்றிநிச்சயம் தோழா!
இன்று செய்யவதை இன்றே,அதையும் நன்றே செய்வாய் தோழா!
நேரத்தை பின்போட்டு நாளை யென்றால் சோம்பல் உன்னை வென்றுவிடும்
நல்லநாள் தேடி இன்றையநாளைப்பழிபோடாதே
நாளும் கோளும் நன்மையே தருமென அறிவாய்
பிறர்க்குதவ என்றும் சித்தமாக நேரத்தை ஒதுக்குவாய்
தக்கநேரஉதவி,ஞாலத்தில் மாணப்பெரிதாம்
உடன்கிடைக்காத நீதியும் மறுக்கப்பட்ட நீதியாம்
நேரத்தை வீண்விரயஞ் செய்யாத மேதைகளை உலகறிவார்
மனிதராய் இறைவன் எமைப்படைத்த நேரம்
மனிதருள்ளும் மனம் ஒன்றை உருவாக்கிய நேரம்
பிறக்கும்நேரம் எல்லோரும் நல்லவராய் பிறந்தார்
வளரும்போது தீயவராய் மாறுவது சூழல் வாய்த்த நேரம்
அவமாய் நேரவிரயமும்சுயமாய்நேரந்தவறாமையும் உலகால் போற்றப்படும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
