சூடு பிடிக்கும் அரசியல்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.09.24
ஆக்கம் 329
சூடு பிடிக்கும் அரசியல்

நாடி நிற்கும் தேர்தல்
சூடு பிடிக்கும் அரசியல்
கூடிப் போட்டியிடும்
வேட்பாளர் கொட்டி
முழங்கும் கூக்குரல்கள்

பேச்சிலே வெட்டு
வேட்டுக்கள்
முழு மூச்சாய் வோட்டு
வாங்கப் பாடுபடும்
கூட்டுக் குழுக்கள்

தமிழர் தீர்வு ஒன்றே
நாட்டுப் பிரச்சினை என்றே கூறி எம்மின
மந்திரிமாருடன் மகுடி
ஊதிடும் பட்டியல்

குட்டிக் குட்டி குனிய
வைக்கும் தந்திரம்
இயந்திர வேகத்திலே
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எட்டி
உதைக்கும் பேரினவாதிகளின்
ஏமாற்றும் மந்திரம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading