06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
தமிழ்த்தாய் வணக்கம்
“””””””””””””””””””
தமிழவள் தமிழரில்
தங்கிடும் உயிரவள்
தமிழனை தகைவுறத்
தழைத்திடச் செய்பவள்
தகித்திடும் நெருப்பினும்
தகதகத் திருப்பவள்
அகிலமே அவளது
அழகினில் மயங்கிடும்
பிழைத்திடும் வழக்கினைப்
பிறப்பிலே அழிப்பவள்
அழைத்திடும் அடியவர்
அருகினில் தவழ்பவள்
முதல்மொழி அவளென
முடிபுனை தகைமையள்
இதமுற தரணியில்
இயங்கிடும் இனியவள்
பதமலர் பணிந்திடப்
பரவசம் அடைபவள்
நிதமெனை அணைப்பவள்
நிழலென தொடர்பவள்
தலைநிமிர் தமிழனாய்
தரத்தினை அருள்பவள்
நிலைபெறு அழகினால்
நிலவிடும் அமுதவள்
களம்பல படைத்திடும்
கவிகளின் குலமகள்
பழம்பல பனுவலில்
பரவிடும் பசுமையள்
அணிகளை அணிந்துமே
அவனியில் உலவிட
அனைவரும் அடிபணிந்
தவளடி தொழுவமே!
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...