ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36
14-05-2024

குருதிப்புனல்

எம் கனவுதேசம்
கையை விட்டு
கடந்து போன காலம்
கொஞ்சம் நினைக்க
நெஞ்சம் பதறுதே..

இழந்த உரிமைக்காக
விடுதலைக்காக
சுயமரியாதைக்காக
குரல் கொடுக்க
ஒடுக்க இனப்படுகொலைகள்

கடல் சூழ் முள்ளிவாய்க்கால்
தொடரல் நிலத்தில்
கடல் போலச் சனங்கள்
குருதிப்புனலாக
நகர்ந்த நாளிது

இளையவர், முதியவருமாய்
குஞ்சுகளும், பிஞ்சுகளுமாய்
தஞ்சம் புகுந்த இடத்திலே
நெஞ்சங்கள் பிளந்து
அழிந்தது எம் இனம்

மரண ஓலங்கள் ஒலித்தது.
அழுகுரல்கள் காதை பிளந்தன
நந்திக்கடல், குருதிப் புனலாய்
அலை பாய அந்நியதேசம்
அமைதியும் காத்த மே 18.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading