08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-43
02-07-2024
பள்ளிப்பருவம்
பெற்றோரின் கனவுகளை
புத்தகமாய் முதுகில் சுமந்த பருவம்
மற்றவர்க்கு உதவிக் கொண்டு
மிதி வண்டியில்ப் பறந்த இப்பருவம்!
படிப்பு மட்டும் வாழ்க்கையற்று
பட்டாம் பூச்சியாய் பறந்த பருவம்
சாதி மத பேதமற்று, சங்கடங்கள் ஏதுமற்று சமத்துவமும், பக்குவமும் கலந்த உருவம்.
சின்ன சின்ன சேட்டைகளும்
சீண்டிப் பார்க்கும் வயசுமிது
பழைய நினைவை மீட்கும் போது
பசுமை தரும் மகத்துவமுமிது!
வீட்டுச் சிறையிலிருந்து திறமைகளை வெளிக்கொணர்ந்த பருவமிது
பெற்றோர் போல ஆசானும்
பேரறிவு மேலோனும் உணர்ந்த பருவமிது.
தொலைந்து நெடு தூரம் போனாலும்
தொடர்கதையாய் தொடரும் இப்பருவம்
தோற்காமல் மலரும் சில நினைவுகளும்
தொங்கி நிற்கும் கனவுகளும் தந்த பருவம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...