மே தினமே மேதினியில் (712)
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராசா
சசிச
காணி
காணிநிலம் விட்டுவிட்டு தப்பினேன் பிழைத்தேனென
கண்டம் விட்டு கண்டம் வந்தேன்
பேணி அதனை நல்லபடி பார்த்திடவே
பாசக்காற உடன்பிறப்பை காவலனாய் விட்டேன்
நானிங்கு வந்து வருடங்கள் பலவானது
நடுவிலே இடைக்கிடை தொலைபேசியில் கதைப்பேன்
வானிலே புதையுண்ட நட்சத்திரம் போல
வந்த இடத்திலேயே முகாமிட்டு தங்கிவிட்டேன்
விடுமுறைக்கு நாடுசென்று திரும்பிய ஊராரும்
வீணாக புது வதந்தியைக் கிளப்புகின்றார்
கொடுத்துமே பார்க்க சொன்ன நிலத்தை
கண்காணிப்பவர் அதை தன்பெயரில் மாற்றிவிட்டாரென
குடும்பத்து அங்கத்தவர் இப்படியும் செய்வாரா
கருத்தில் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டேன்
அடுத்தவர் பேச்சை செவிக்குள் உள்வாங்காது
ஆணித்தனமாக என்னுடைய சொந்தத்தை நம்பினேன்
நல்ல உறவென நினைத்தது தப்பானது
நாடகம் எல்லாமுமென கடைசியில் தெரிந்தது
எல்லைக்கு காவல் வைத்தவனே இறுதியில்
ஏமாற்றுவாரென யார்தான் முன்னரே கண்டது
கள்ள வேடம் புனைபவர் எவரென
கண்களிற்கு ஆரம்பத்தில் சரியாக தெரியவில்லை
சொல்லுகின்றேன் உண்மையாக நாலுபரப்பு காணியது
சரிசெய்வார் யாருண்டு இழைக்கப்பட்ட வஞ்சகத்தை
ஜெயம்
08-05-2023
