ஜெயம் தங்கராஜா

சசிச

வேள்வி

தாயக விடுதலை வேள்வி தன்னில்
நாயகர் எத்தனையோ மாண்டனர் ஈழமண்ணில்
யாருக்காக இந்த அளப்பரிய யாகம்
ஈரைந்து மாதமாய் சுமந்தவள்போல் தியாகம்

தன்னுயிர் கொடுத்து செய்திட்டதந்த தேசப்பணி
மண்ணிலே அறம்காத்த போராட்டமோ தனி
சாவரினும் தளர்ந்திடாத இனங்காக்கும் செயல்
யார்வரினும் பணிந்திடாது தணியாத புயல்

பூமிமேடையில் தான்தனக்கென்ற சுயநல மனிதர்கள்
சாமிகளாயுலாவிய இவரன்றோ இனத்தின் புனிதர்கள்
புறப்பட்டனரே உறுதிபூண்டு உரிமைகளை வெல்ல
மறவர்களின் சாதனைகள் ஒன்றாரெண்டா சொல்ல

இலட்சிய கனவுக்காய் தம்மையே கொடுத்தாரே
மலர்ந்திட தாயகம் ஆயுதம் எடுத்தாரே
குண்டுமழையில் நின்று களமாடிய மாவீரரே
என்றுமழியாது மைந்தரின் புகழ் பேரதே

ஜெயம்
26-05-2024

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading