திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து.

*விடுமுறைக் களிப்பு.*

சீல வாழ்வு சிந்தையில் தேடி
காலங் கடந்து தேடிய பயணம்
ஞாலம் எல்லாம் நமதாய்ப் போக
பாலமானது பலவழிப் பாதை

ஓட்டமும் நடையும் ஒருதரம் ஓய
வீட்டை மறந்து விண் வரை பறந்து
கூட்டமாய் உறவொடு
கூடி மகிழ்ந்து
ஊட்ட உணவினில்
உள்ளம் மகிழ்ந்து

சின்ன ஆசைகள் சிலநாள் அடைவினில்
இன்னல் மறந்த இன்பப் பொழுதுகள்
பின்னும் ஈழம் செல்லத் துடிக்கும்
என்மனம் இன்னும்
தாய்மடி தேடும் .

Nada Mohan
Author: Nada Mohan