” பூத்துவிட்டது புத்தாண்டு “

ரஜனி அன்ரன்

“ பூத்துவிட்டது புத்தாண்டு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 02.01.2025

மத்தாப்பு வாண வேடிக்கையோடு
முத்தாப்பாய் பூத்தது புதிய புத்தாண்டு
புதிய தொடக்கங்கள்
புத்துணர்வுத் தூண்டல்கள்
புதிய தேடல்கள் வலுப்பெறட்டும்
கொடிய நோய்களும்
நெடிய போர்களும் அகலட்டும்
சமூக ஒருங்கிசைவும் மேம்படட்டும் !

கடந்த ஆண்டு பலதும் பத்துமாய்
இயற்கையின் சீற்றமும் சீர்குலைவுமாய்
இடர்களாய் வந்து இடையூறு செய்து
விடை பெற்றுச் சென்றதே விருப்பின்றி
பூத்துவிட்ட புத்தாண்டு
புன்னகையை அள்ளித் தரட்டும்
புண்பட்ட உள்ளங்களை
பண்படுத்தி மகிழட்டும் !

இருபத்தி ஐந்தில் பூத்திட்ட ஆண்டே
திருப்பங்கள் மலர்ந்திட
விருப்பங்கள் நிறைவேறிட
எண்ணங்கள் வண்ணங்களாக
ஏற்றங்கள் மாற்றங்கள் உருவாகிட
இணைக்கரம் தந்துவிடு புத்தாண்டே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading