மனோகரி ஜெகதீஸ்வரன்

கை நிறைய நெல்லைத் தந்து
தையும் பிறந்ததடி இன்று
தளர்வுதனைப் போக்க என்று

மெய் வருந்தியவர் அயர்வை
மேனி சொட்டிய வியர்வைப் பெருக்கை
மெய்யாய் உரைத்திடுவாயோ
மேனிலை அவர்க்கு கிட்டிடவே

உழவுக்கு வந்தனை செய்வாரே
உரிமம் கொண்டவர் உண்பதற்கு
பழகு நீயும் பழங்கால வழக்கை
இலகுவழி இளக்கராமின்றி வாழ

மனோ -மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading