கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
மூட்டிய தீ (மே 31,1981நள்ளிரவு)
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-30
30-05-2024
மூட்டிய தீ (மே 31,1981நள்ளிரவு)
மாபெரும் அறிவுப் பொக்கிஷம்
யாழ் நூலகம் மூட்டிய தீயால்
கருகிப் போக, அறிவிழப்பை
பாரம்பரிய சொத்திழப்பை ,
தொன்மை இழப்பை
ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பை …
ஈழத் தமிழ் மக்களது
அழியாக் காயமிது
இதயம் தொருங்கி
இறுகி ரணமாகி
மனங்களெல்லாம்
தீக்கிரையான நாளிது!
தெற்காசியாவில்
பெரும் நூலாகமென
பெருமை கொண்ட மக்களுக்கு
வறுமைக்கு கிடைத்த
இன, கலாச்சார அழிப்பிது
மூட்டிய தீயிது!
பழமைபுகு ஈழ ஓலைச்சுவடிகள்
ஈழத்தின் பண்டைய நூல்கள்
பத்திரிகை மூலப் பிரதிகள்
தமிழன் ஆண்டது இலங்கைத் தீவெனும்
அரிய ஆவணங்கள்
அலமாரியில் 97 ஆயிரம் புத்தகங்கள்
மூட்டிய தீயில் கருகிப் போக…
மூண்ட தீ போக
மீண்டெழுவோம்
அறிவுத் தீ மூட்டும்
தீக்குச்சிகள் சேர்ப்போம்
புதிய ஆக்கங்கள் தொகுத்து
நோக்கத்தை காப்போம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
