புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்

என்று தீரும்..

நித்தமும் நீர்த்திவலை நீந்தும் மேடான
உத்தமி கன்னங்கள் உருக்குலைந்து போகிற
வேளையிலும் ஏங்கிஏங்கி வேதனையில் உறைந்து
ஈழமண்ணை முத்தமிடு வாள்

என்ன பயன் ஏறெடுத்துப் பாராத
அன்பு வரண்ட அழுகிய ஊரில்
இருப்பியல் இன்பம் இனிமை தொலைத்த
கருத்து வரண்ட நிலம்

பச்சயம் வாடி பகலை இழந்து
அச்சத்தால் அலைந்து அமைதி இழந்து
தாழ்ந்து தலைசாய்ந்த தண்ணீர்ப்பா ரம்நிறைந்த
தாழைபோல் கலங்கிநின் றதே

அவளும் இவளும் அனாதை அன்பு
தவளும் உலகமீதில் தண்ணீர் குமிழி
போலாய் உடைந்துடைந்து பொலபொல வெனவே
ஓலமிடு கின்றன ரே

இந்நிலையில் துன்பியல் ஈயும் நிலத்திலே
அந்திப் பொழுதென ஆதவன் நித்தம்
எழாது இருட்டை எழிலாய் தரவே
அழலாய் எரியும் தினம்

– கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading