ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.05.22
ஆக்கம்-225
மாறாததுமேனா
இன்றும் வழமை போல் மே தினம் வந்ததே
என்றும் போராடும் தொழிலாளரோ
இன்று போல் என்றென்றும் தீராத வலியுடன்
கண்ணீரில் எழுதி அனுப்பும் பிரதிகளோ
காலங்காலமாய் முதலாளி கண்ணில் படாததுமேனோ

உண்ணாது உறங்காது மாடாய் உழைக்கும்
மானிடர்க்குக் கூலியோ குறைவு
நாளும் பொழுதும் உழைப்பவனை உதைத்து
உதிரம் உறிஞ்சும் முதலாளி வர்க்கமே

தொழிலாளியின் தோற்றம் மாறினாலும்
முதலாளியில் மாற்றம் மாறாமலிருப்பதுமேனோ
முதலாளி தொழிலாளியாக மாறினாலும்
ஏமாற்றம் தொடர்வதுமேனோ மாறாததுமேனோ

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading