ராணி சம்பந்தர்

04.02.25
ஆக்கம் 175
மாசி

மகத்துவமான மாதம்
மாசியில் மகா மகப்
பண்டிகை அமோக
வரவேற்புக் கண்டதே

12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலர் போல
மாசி மகா மகமும்
“கும்பமேளா” எனும்
சிறப்பு பெயரானதே

தாலிப் பாக்கியம் நிலைத்திடவே
கூடிவரும் திருமணம்
தீர்க்க சுமங்கலியாய்
வாழ்த்துப் பெற்றுக்
கொண்டதே

தோஷம் மறைந்து
பாவம் போக்கிப்
பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில்
விநாயகர் வழிபடப்
பொன்னான நாட்கள்
வருவது இம் மாசி மாதத்திலே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading