லண்டன் தமிழ் றேடியோ

கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ…

காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே

முப்பத்து ஏழு ஆண்டுகளாய்
கெட்பவர் மனதை
சிறைபிடித்தாய்;

உன் நிகழ்ச்சிகளின்
திறனால் வலைவிரித்தாய்
கண்ணை காக்கும்
இமைபோல கேட்பவர்
மனதை அவர் சோகம்
மறந்து முகம் மலர வைத்தாய்;

எத்தனையே வலிகளில்
தத்தளித்திடும் வேளைதனிலே
தாய்மடிபோல் வந்தாயே
என் மனதின் வலிகள்
அவை நீ தீர்த்தாயே;

கண்களில் நீர் வழிந்திட
நின்ற வேளைதனிலே
கண்களின் நீர் துடைத்தே
நெஞ்சினில் நின்மதி
தனையே விதைத்தாயே;

இதுவரை கொண்டிராத
மோகம் கொண்டேன்
உன்னிடத்தில்; என்றும்
நீங்கா காதல் கொண்டேன்
என் மனதில்…
-விண்ணவன் – குமுழமுனை….

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading