திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நடிப்பு

சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம் அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர் நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர் கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தேங்காய்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால் மண் அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர் வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நிற்பார்
வஞ்சம் கொண்ட வக்கிரப் போக்கர்
உலகமோ இருட்டு வலம் வரும் திருட்டு முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும் நடிக்கவே வேண்டும்!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading