வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நடிப்பு…
பாத்திரங்கள் பலதாகும்
பாரிலே நிகழ்வாகும்
ஆற்றுகின்ற பணிக்கேற்ப
அவரவரின் திறன்பேசும்
தேடற்கரியதாய்
தேவைக்கேற்பதாய்
நாளும் நடப்பதாய்
நவரசம் கலந்ததாய்
மூடும் முகத்திரை
நடிப்பே நம்நிலை
வலுவும் வசப்படும்
வரட்சியும் தென்படும்
போடும் வேடத்தில்
ஆடும் களமிது
போலியற்றதாய்
வாழத்தலைப்படு!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading