தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகியலில் ஒருமாற்றம்…
அழகியல் வனப்பு அலங்காரம்
அவனியெங்கும் ஆரவாரம்
மனதிடை மகிழ்வா பிரவாகம்
கைகளில் தொலைபேசி உறவாடும்

இயற்கையின் ரசனை குன்றிடும்
இயல்பு வாழ்வு மாறிடும்
வீட்டுக்குள் வீடு பல உலகம்
விபரங்கள் தெரியாத பலவேசம்

உறக்கமற்ற விழிப்பு நிலை
உபாதை நிறைந்த உடலின் நிலை
நட்பே அற்ற தனிமை வழி
நலிந்து போகும் சமூகநிலை

உலக நடப்பில் உல்லாசம்
உறவுகள் தொலைத்த வாழ்வாகும்
மாறிய வாழ்வின் படகிலே
இரு தலைமுறைப் பயணத்தின்
இடைவேளை
மெல்லென ஒடுது சக்கரம்
மாறிட வேண்டிய கட்டாயம்
மனதிடை பதித்தெழு மாண்பாகும்
மல்லிகை மலராய் மணம் வீச
நம்மையே நாம் மாற்றல் உலகியலே.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan