அகிம்சையெனும் காவியம்

ரஜனி அன்ரன் (B.A) “ அகிம்சையெனும் காவியம் “ 25.09.2025

தியாகமே அகிம்சையெனும் ஆயுதம்
மகாயாகமே உன் மனஉறுதியின் காவியம்
அறவழி நின்ற பலமே உன்உயிரோவியம்
அகிம்சையெனும் காவியத்தின் அத்தியாயம்
இனத்திற்கான தியாகத்தின் உச்சம்
இன்னுயிரை ஈகம்செய்ததே அகிம்சைக்கு அர்ப்பணம்
அண்ணலே இதற்கு நீயேநிரூபணம் !

தமிழ்வானில் என்றும் உன்கீர்த்தி
தனித்துவமான தியாகத்தின் மூர்த்தி
காணிக்கையாக்கி காவியமானாய்
அகிம்சையெனும் காவியம் வரலாற்றின் ஓவியம் !

மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மறவனை
வரலாற்றைப் புரட்டிவிட்ட புரட்சியாளனை
தமிழன்னைக்கு தன்னையே ஈகம்செய்த காவியனை
மனதில் நினைப்போம் மறவாதிருப்போம் – நீ
ஊரெழுவில் பிறந்ததனால் ஊரேபெருமைபெற
தேரடியில் துயில்கொண்டதனால் நல்லூரானும் பெருமை பெற்றானே !

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading