தமிழே..

வசந்தா ஜெகதீசன்
தமிழே…
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம் கலந்தாய்
இன்தமிழ் ஈர்ப்பில்
இலக்கிய நயத்தில்
செந்தமிழ் நிறைந்த செம்மொழி- வாழி
சான்றுரை பலவாய்
சாதிக்கும் தமிழே
வென்றுரை வீரத்தின் வெற்றியின் மிடுக்கில்
எம் தமிழ் ஊற்றே
உணர்வின் வீச்சே
உயிரின் நாதமாய்
ஓங்குபுகழாய்
மங்கத் தமிழே மறவர் மொழியே!
கணினி யுகத்தில்
காசினி மிளிர்க!
நன்றி

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading