வர்ண வர்ண பூக்களே!
வண்ண வண்ணப் பூக்கள்…..
அட மனிதா
கவி 752
அட மனிதா
உறவுகளைச் சுற்றி தத்துரூப நாடகம்
எத்தனை முகமூடிகள் கைதேர்ந்த நடிப்பு
பொருளாசை மண்ணாசை என ஆசைகள் கொண்டு
தன்மனச் சொற்படி பொய்வழிதனில் நடப்பதாயின்று
பொய்மொழிகள் பேசி நல்வழிகாட்டும் புதிய உத்தமர்கள்
ஜம்புலன்களையும் கள்ளப்புலன்களாகவே பாவிக்கும் நவீன உன்னதர்கள்
இந்த உலகச்சிறை கொத்தடிமைகள் கூட்டம்
பொய்வேடமிட்டு இயல்பெனக்காட்டி வையகத்தில் ஆட்டம்
உயிர்களைக்கொன்று உயிர்வாழும் மனிதகுல தன்மை
பாவங்கள் நூறு நாளாந்தம் செய்தே மேன்மை
நீர்க்குமிழி போன்றது உடலென அறிந்திடினும் உண்மை
உண்மையின் நேர்மையின் தன்மையும் சிதைந்ததும் உண்மை
பொல்லாதவைகளை செய்வதில் அப்படியொரு ஈடுபாடு
அடங்காத உள்ளமதன் சொற்படி நிலைப்பாடு
மண்ணுயிரை தன்னுயிராய் நினைக்காதே கொடுமைகள்
ஆற்றலையும் அறிவையும் சீற்றத்தால் தொலைக்கின்ற மடமைகள்
அன்பு என்பது ஆழமாக இல்லாது வற்றிவிட்டது
பக்தி என்பது அறிவுபூர்வமாக இன்றி கேலிக்கூத்தானது
ஏமாற்றுபவர்களும் ஏமாளிகளும் அதிகரித்த உலகம்
சூதாட்ட வாழ்க்கையதன் சீர்குலைந்த பயணம்.
ஜெயம்
05-12-2024
