தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அறிவாலயம் அனலாதே..

வசந்தா ஜெகதீசன்

அறிவாலயம் அனலானதே
…. காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின் அறிவகம்
அரிச்சுவடி நூலகம்
பூண்டோடு அழிப்பதற்காய்
புத்தியற்றுச் சிதைப்பதற்காய்
தமிழினத்து வரலாற்றை
தகர்த்திட துணிந்தனர்
ஆகுதிக்கு இரையாக்கி
அறிவற்ற ஜிவிகளாய்
ஆதாரமற்ற தமிழர்களாய்
நிலைகுன்ற வைப்பதற்கு
அனலிட்டு அழித்தனர்
ஆதாரமின்றியே பொசுக்கினார்
தமிழரினம் துடித்தது
வெந்தணலின் வேதனையில்
வெந்தே வீறுகொண்டோம்
மீளமைப்பில் மிடுக்கானோம்
அன்று வைத்த தீ
இன்றும் எரி நெருப்பே
அகத்தின் குன்றிலே
அகலாத பெருந்தவிப்பே.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading