அறிவுக் கண் திறந்த தியாகிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(667) அன்பெனும் ஒளியாகி ஆர்வத்தீயை அகத்தில்மூட்டி இருள் நீக்கும்ஒளியென இயலாக் கனவினையும் நனவாக்கி வாழ்வில் மதிப்பை வளமாய்...

Continue reading

அறிவுக் கண் திறந்த தியாகிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(667)

அன்பெனும் ஒளியாகி
ஆர்வத்தீயை அகத்தில்மூட்டி
இருள் நீக்கும்ஒளியென
இயலாக் கனவினையும் நனவாக்கி

வாழ்வில் மதிப்பை
வளமாய் சேர்க்க
நற் பண்பென்னும் விதைகளை
நெஞ்சில்விதைத்து

ஒழுக்கம் நேர்மையெனும்
சீரிய குணங்களை
எமக்கூட்டி எம்மை
செதுக்கி எடுத்த சிற்பிகள்

மனதின் சுமையை மகிழ்வாக்கி
பள்ளிப் பருவத்தை பரவசமாக்கி
பயிலும் பாடத்தை பாசமாய்
கற்றுத் தந்த பண்பாளர்கள்

சலிப்பில்லா முகத்தில் என்றும்
புன்னகை மலர்ந்திருக்க
பிழைகளைத் திருத்திடும்
பண்பும் கொண்டு இனிதாய் கற்பித்து

இதயத்தில் நிறைந்திருக்கும்
தியாகிகளை நன்றியோடு
போற்றிடுவோம்.
நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading