அன்றைய நினைவுகள்

ராணி சம்பந்தர்

பெற்றோர் போற்றி நட்டு
வைத்த நினைவு சின்ன
மரங்கள் மெல்ல வளரவே
மல்லுக்கட்டிய காலநிலை
சொல்லுக் கேட்டு குட்டிக்
குட்டி வளர்த்தது

நான் அங்கிருக்கும் போது
பட்டி தொட்டி அடிவளவு
அருகே நட்டவை ஆசைக்கு
பூக்கத் தொடங்கியது

இடம் பெயர்ந்து இங்கே
வந்திருந்ததும் எல்லாம்
காய்த்து பழுக்கவே
அன்றைய நினைவின்
சின்னங்கள் மறக்க
முடியாது கனவில் கூட
உண்ண முடியாதவர்
ஆனோமே .

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading