மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

அவே இராசலிங்கம்

நினைவுநாள்!

நினைவுநாள் நிகழ்வுக் குண்டு
நிலவுநாள் குளுமைக் குண்டு
கனவுநாள் மகிமைக் குண்டு
கனதிநாள் கருத்துக் குண்டு
மனதுநாள் மதிப்புக் குண்டு
மகிழ்ச்சிநாள் இருப்புக் குண்டு
உனதுநாள் வியப்புக் குண்டு
உன்னத படைப்புக் குண்டு !

வத்திரம் உடுக்கும் நாளே
மாவலம் அடுக்கும் நாளே
ஒத்தடம் எடுக்கும் நாளே
உள்ளமும் களிக்கும் நாளே
அத்திரம் பறக்கும் நாளே
அம்புகள் பிறக்கும் நாளே
முத்தமிழ் செழிக்கும் நாளே
முன்வயம் ஒளிரும் நாளே !

கனலியே எதிர்கொண் டாற்போல்
காற்சிலம் பதிர்தல் போலாம்
அனலிடைத் தோய்ந்த மாது
அறமெனக் குரைத்தல் மேலாம்
சினமென வைகுஞ் செவ்வேள்
செந்தமிழ்க் கரங்கள் கோலாம்
புனலிடை மழையென் றாகிப்
பேசிடும் அறங்க ளாகும் !

எத்தனை யுகம்போ னாலும்
எத்தனை வதம்போ னாலும்
சித்திரம் அனைய செந்தேன்
சீருடை அணிந்த அன்னை
பத்திரம் புனையு மட்டும்
பரிட்சய மாகும் சட்டம்
வித்தென அமையு மட்டும்
விழியென இருப்பாள் அம்மா !

பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan