ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இசை…

வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த மகிழ்வில்
உதயமாகும் காதலே

இசைக்குள் இசையாய் வாழ்வை
ஈர்க்கும் இதயத் தாகம்
நோய்க்கு மருந்தாய் ஆற்றும்
நடந்த உளத்தைத் தேற்றும்
ராகமிசைக்குள் மதுரம்
நாமும் ரசித்து மகிழ்வோம்.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading