இதுதான் எது அதுதான் இது

ஜெயம் தங்கராஜா

கவிதை 763

இதுதான் எது அதுதான் இது

அறிவிக்காமலே வந்துவிடும்
உண்ணவென விருந்து
தீரா நோய்களின் கவலைகளை தீர்த்துவைக்கும் மருந்து இறைவனாயில்லை இருந்தாலும் ஏனோ பயமுண்டு
நெருங்கவிடாது இதை பார்த்தலே மகிழ்வுண்டு

வீடுவீடாக தரிசிப்பது போகாத வீடுகளேயில்லை
தன்னை நினைக்கவைத்து நிம்மதியை குலைக்குமிது
உருவம் இதற்கில்லை உருவங்களைப் பிடிக்காது
இதன் செயலாலே கடவுளுக்கும் இழுக்குண்டு

யாருக்கும் இதனாலே பலனெதுவும் கிடையாது
பணங்கொடுத்தால் போகுமென்றால் அதுவுங்கூட முடியாது
இயற்கையானதா செயற்கையானதா இன்றுவரை புரியவில்லை
இரசனையில்லாதது மட்டுமல்ல உறவையறியாது என்று
அதிகமானோர் வருந்துகின்றார் அனுபவத்தைக் கொண்டு

இதை கடந்துவிட்டுப் போகவே திட்டம்
இருந்தாலும் வலிந்துமே தானாகவே முட்டும்
வேட்டையாடி சந்தோசிக்கும் வேடனின் காட்டம்
மாற்றமொன்றை காட்டவரும் விழியறியா தோற்றம்

உண்மையில் ஒவ்வொருவருக்கும் அருக்காமையிலேயே உண்டு
ஒருவருக்காக ஒருவர் செய்யமுடியாத ஒன்று
ஓடுகின்றோம் முன்னாலே சேர்ந்தே ஓடுகின்றது
வாழ்க்கை அற்புதமானதாகும் இதனை தவிர்த்தால்

பாயை சுருட்டும் செய்த பாவப்பொருளோ
அதிஷ்டம் இல்லா மானிடர் நிகழ்வோ
புகழென்ன பெயரென்ன தொடர்வதுவும் இதனாலே
எங்குமே எதிர்பார்க்க வைத்துவிடும் புதிர்தானே

ஜெயம்
27-02-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading