திங்கள்

ராணி சம்பந்தர்

மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ

சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு வர்ணப் பட்டாடை உடுத்து
சீவிச் சிங்காரித்து மேகக் கூட்டம்
முக்காடிட்டிட சுழன்று வந்திடவே

வான்தேரில் உன்பங்காளி விண்-
மீன் சுற்றிட வெட்கித் தலைகுனிய
தொற்றிடுவோர் கண்கள் கூசிடும்
பூரணச்சந்திராவே மெல்ல மெல்ல
உன் குளிர் மேனி தொட்டு நடந்திட

மென் நடைப் பார்வை பட்டு தன்னடை
கெட்டு மயங்கிடும் சூரிய பகவானோ
ஒளிர்ந்திருந்து பார்வையிட முழுமதியோ
தேய்ந்து வெட்கத்தில் தேய்ந்து பாதி
முகமாகி அரைமதியானாளோ திங்கள் .

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading