இதெல்லாம் இப்ப எங்கே

நகுலா சிவநாதன்

இதெல்லாம் இப்ப எங்கே
இப்ப இதுவெல்லாம் இல்லையல்லோ!
மனித உரிமையில்லை மானிடப் பண்பில்லை
துணிந்து வாழ முடியவில்லை
துயரம் நிறைந்த வாழ்வுச்சூழல்
துரத்தி செல்லும் துன்ப வலைகள்

இப்ப இதுவும் இல்லையல்லோ!
கனிந்து பேசும் அன்புச்சூழல்
கடல் கடந்தும் இல்லையல்லவோ
மடல் திறந்து எழுதுவதுமில்லை
மனிதரை மனிதர் மதிப்பதுமில்லை

ஒற்றுமை இங்கில்லை
ஒன்றியவாழ்வும் நிலைப்பதில்லை
உறவுப்பாலமில்லை
உணர்ந்து பேச மனிதருமில்லை
இப்போ மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு
மணித்துளிக்கும்p கூட வில்லை

வீட்டுக்கு விருந்தினர் வருவதில்லை
வீதியில் மக்கள் கூடுவதில்லை
அன்பு பெருகி வாழ்வதில்லை
அருமைப் பண்பும் தெரிவதில்லை

மனிதநேயம் மாண்புக்கும் இல்லை
மனசுவிட்டுப் பேசுவதில்லை
உறவுகள் இணைந்து குதூகலிப்பதில்லை
உணர்வே இயந்திர வலைக்குள் சுழலுது

நகுலா சிவநாதன்1790

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading